முதல் நாளில் நுழைவுசீட்டு 100 ருபா என்றதும் என்னோடு சேர்த்து 9 பேர் அமர்ந்து இளைஞ்சனை பார்த்துவிட்டு வந்தேன்..அதற்குள் ஆடுகளம் இரண்டாம் பகுதி தேறலை..என வந்த செய்திகளை அடுத்து விலை குறைந்திருக்கும் என மறுநாள் போனேன்..அப்போதும் அதே விலைதான்..இன்றும் இளைஞ்சனை பார்க்க முடியாது..ஒரு வேலை பார்த்தால் கார்க்கியை வெட்டியிருப்பேன்..விஜயை அல்ல..மக்சஈமைதான்..அவர்தானே..பொதுவுடைமை பத்தி மக்களுக்கு தப்பா?சொன்னது..சரி விடுவோம்.ஆடுகளத்தின் கதையும் களமும் கோழிகளும் கோழியை வளர்ப்பவின் வாழ்வும்தான்..தனுசிர்க்கு நன்றி..கடைசிவரை தனுசின் படமாக மாற்றாமல்..அருமையான பக்குவமான நடிப்பை வெளி படுத்தியதற்கு..உண்மையில் நான் கூற விரும்புவது..என் மனநிலையில் தனுசை விட சிறந்த நடிகன் தற்போதைய தமிழ் திரையில் இல்லை என்பதை..சரி அவரையும் விட்டு விடுவோம்..பேட்டைக்காரனும் கோழிகளும் என தலைப்பு வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.. பெட்டைக்காரனாக வரும் பெருசுவின் வாழ்க்கையே புதுசாக இருக்கிறது..தனது தளபதிகளுக்கு பிரச்சனை வரும் என்பதற்காக காவல் துறை ஆய்வாளராக இருக்கும் ரத்தினத்திடம்..இனி கோழி சண்டையில் உன்னிடம் போட்டி போட முடியாது ..அதிகாரமும் பணமும் உள்ளவன் என்ன வேண்ணா செய்வான்..இது தன்மானம் என விலகி போவதிலிருந்து..அவரின் பறந்து பட்ட உலகம் விரிகிறது..பின்னாட்களில் அவரே தன ஒல்லை மீறி தனது பெருமையை ஒழித்த தளபதியை தந்திரமாக பழி வாங்குவது..என அவரின் எல்லையில்லா பரிமாணத்தில் திரை தனது மகிழ்ச்சியை கண்ணீரை துக்கத்தை கொட்டியபடியே இருக்கிறது..அழகியலான ஆங்கிலோ இந்திய பெண்ணினுடனான நேசத்தில் தனுசு வெளிப்படுத்தும் பாவனைகள் முதல்..மேற்கொண்டு,,மேற்கொண்டு,,மேற்கொண்டு,,அற்ப்புதம் போங்கள்.. சொற்கள் கரைந்து போகின்றன.. சிறந்த படம் படம் முழுக்கவே மெல்லிய சிரிப்பை இழையோட நகர்த்தி செல்வதில் மட்டுமல்ல..பின் பகுதியின் அழுத்தங்களையும் கொண்டிருக்கத்தான் வேண்டும்..அது சில நேரங்களில் சிறியதொரு அழுப்பைதரத்தான் செய்யும்..மூளையின் அடுக்களில் நாம் புரிந்து வைத்து இருக்கும் சினிமா பிம்பங்கள் அத்தகைய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் ..ஆனாலும்..பார்வையாளனை உன்னத மனநிலைக்கு அறிவுக்கடத்தளுக்கு எடுத்து செல்வது படைப்பாளியின் கடமை..அதை வெற்றி கூர்மையாக செய்துள்ளார்..படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களின் கதையாடல்கலுமே..நமது புறந்தள்ளப்பட்ட அழகியலான வாழ்வை முன் வைக்கிறது..சிலாகிக்க கொண்டாட நிறையா இருக்கிறது..கண்டிப்பாக பார்க்க வேண்டும் நண்பர்களே..

நீங்கள் எப்போதாவது விபத்தை பார்த்து மயக்கம் வருவதாக சொல்வீர்கள்..?எப்போதாவது பின கிடங்கில் எட்டி பார்க்கும் வாய்ப்பிருந்தால் குடலை புரட்டுவதாக சொல்வீர்கள் ..?எந்த கணத்திலாவது உடம்பில் வெடிகளை கட்டிக்கொள்ள சம்மதிப்பீர்களா ..?எந்த கணத்திலாவது தெரிந்தே தன்னை மாய்த்துக்கொள்ள விரும்புவீர்களா..?ஆம் என்றால் உங்களுக்கு உங்களின் உரிமை மீதான அட்பாக்கு முறைக்கு எதிராக, ,உங்களின் சுதந்திரத்தின் மீதான தடைகளுக்கு எதிராக ,உங்களின் சக சகோதரியை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் போது பொங்கி எழுந்தவராக இருப்பீர்கள்..?
உங்களை போலவே சுதந்திர தாகத்துடனும் ,தன மொழியை தன சொந்தங்களுடன் பேசிக் கொள்ளவும்,தான் வாழ்ந்த மண்ணை தனது சமுகத்திற்காக விட்டு செல்லவும் ..போராடிய ,அமைதி வழி தோற்ற தருணத்தில் துவக்கை தனக்கு ஆதரவாக கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்ட மாபெரும் போராளிகளின் வீரம் செறிந்த நினைவு நாள் நவம்பர் 27 ..
விஜயையும் அஜித்தும் பணத்திற்காக கெட்டவர்களை அடிக்கும் போது கொண்டாடுகிற நீங்கள் ..உங்களின் எதிர்காலத்திற்க்காக உயிரை தொலைத்த மாவீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ..
செல்களின் பொத்தல் களை உடம்பில் வாங்கி மாய்ந்து போன அவர்களுக்காக என்ன செய்ய வேண்டும் ..உங்களை போல அவர்கள் டிச்கொத்தேவில் களியாடவில்லை..உங்களை போல மூன்று வேலையும் உண்டு புணர்ந்து திரிந்தவர்கள் இல்லை ..அவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் ..உங்களை போல உறவுகளுடன் விருந்து கொண்டாடவில்லை அவர்கர் ..உலகத்தின் அத்தனை சந்தோசங்களையும் சமரசத்தோடு ஏற்று கொள்ளும் உங்களை போல அவர்கள் இல்லை .. அப்படியானால் நீங்கள் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ..உங்களை அவர்கள் காலத்திற்கு அழைக்க வில்லை அவர்கள் ..உங்களுக்காக மட்டுமே அவர்கள் போராடினார்கள் ..அப்படியானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ..நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ..

  • Prabalini Prabakaranமற்றும் Ravee Inbaa ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.

    • Prabalini Prabakaran
      அந்த மாவீரர்களை பெற்று தந்து இன்று பட்டினியில் தனிமையில் வாடும் அவர் குடும்பத்திற்கு
      குறைந்த பட்சம் உணவு கொடுக்கலாமா? மானம் காக்க உடை கொடுக்கலாமா?
      தமது அண்ணன் தம்பியை இழந்து தவிக்கும் சகோதரிகளுக்கு வாழ்க்கை அமைத்து கொடுக்கலாமா?
      மரங்களுக்கும் ...செடிகளுக்கும் மத்தியில் விலங்குகள் போல் வாழும் உறவுகளுக்கு ஒரு குடிசை கொடுக்கலாமா?
      இவையெல்லாம் இன்று தவிக்கும் எமது உறவுகளுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டியது.
      மிச்சம்??? தெரியவில்லை.. எங்கள் எதிர்காலம் புரியவில்லை!!!!

தேவதை..

இடுகையிட்டது கீரா | 2:38 AM | 0 கருத்துரைகள் »

நேற்று நான்
நடந்த தெருவெல்லாம் என்னோடு நடந்தது மழை ...மன அழகின் வாசல்களை திறந்து
வைத்திருந்தேன் ..அதனுள்ளே கருப்பு தேவதையை போல நுழைந்தது சாரல் ..

இடுகையிட்டது கீரா | 2:35 AM | 0 கருத்துரைகள் »

நேற்றோடு முடிந்து போயிருந்த என் அந்திம காதலை நினைவூட்டியபடியே இருக்கின்றன..உன் பாதை விட்டு சென்ற காலடிகள்.

PACHCHAI ENKIRA KAATHU TRAILOR NEW

இடுகையிட்டது கீரா | 1:02 AM | 2 கருத்துரைகள் »

கீரா இயக்குனர்: வாசமற்றுப் போன பூக்கள்: "பூக்கள் இல்லாத நகரங்களை,மனிதர்கள் இல்லாத இல்லங்களை,பறவைகள் அற்ற வானத்தை நாம் தொடர்ச்சியாக கட்டமைத்து கொண்டிருக்கிறோம்..கடன் வாங்கிய பிறமொழி ..."

பூக்கள் இல்லாத நகரங்களை,மனிதர்கள் இல்லாத இல்லங்களை,பறவைகள் அற்ற வானத்தை நாம் தொடர்ச்சியாக கட்டமைத்து கொண்டிருக்கிறோம்..கடன் வாங்கிய பிறமொழி வார்த்தைகளால் நமது பார்வையை விரித்து கொண்டதாய் மகிழ்ந்து கொள்கிறோம் ..யாரோ எதுதிய கவிதைகளை காதலியிடம் கொடுத்து காம இச்சையை பூர்த்திசெய்து கொள்ளும் மரபாச்சிகளாய் வாழ்வை முடித்து கொள்கிறோம் ..சினிமாவிலிருந்து உலக புரட்சிகள் வரை நாம் பேச வெளியில் இருந்து மோக குப்பைகள் நம்மிடம் நிறைய குவிந்து கிடக்கின்றன ..நம்மையறியாமல் நமக்குள்ளே கருத்து முளைத்து சிறகு விரித்தால் கூட எங்கேயோ திருடப்பட்டதான மனநிலையை நாம் கொண்டிருக்கிறோம் ..மொத்தத்தில் நாமக்கான ஒன்றுமற்று திடீர் கடவுளின் நிலையாகிறோம் ..

கொச்சையாக பேசி பழகிய எங்களின் மொழி நாகரிகத்திற்கு மாற்றமடைந்ததுமே நாங்களும் மாறிப்போனோம் ..சொல்லப்படாத அணங்குகள் சொல்லப்படாமலே எங்களால் அழித்தொழிக்க பட்டன ..வெள்ளையாக இருப்பது மட்டுமே வாழ்வதற்கான நியதி என எம் அரசர்கள் எங்களுக்கு சொல்லி இருந்தார்கள் ..அதற்க்கான சூத்திரங்கள் உலக நாடுகளிடமிருந்து நதிகளை விற்று வாங்கினோம் ..சிற்றோடைகளை கூட தாரை வார்த்து கொடுத்தோம் ..அதன் மூலம் மெலிதான கரு வெள்ளையை பெற்றோம் ..ஆனாலும் ..மனிதர்களாக முடிய வில்லை ..தொடர்ந்து எங்களின் மூதி நீலியை கழுத்தை அறுத்து கொன்று வெள்ளை காக்கைகளுக்கு இரையாக போட்டோம் ..அப்போது நல்ல மாற்றம் இருந்தது ..சந்தோஷ மிகுதியால் எங்கள் காடுகளை அனுமானை விட்டு பெயர்த்து எடுத்து வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க அரசர்கள் சுற்றி பார்க்க கொடுத்தோம் ...அதன் பிறகு மிச்சமிருந்த பறவைகளும் வனத்தின் அழியா பழங்களும் தொலைந்து போகின..நிரம்பி சிரித்தோம் எல்லாம் கொடுத்தோம் இனி வெள்ளையாக வேண்டியதுதான் பாக்கி ..அப்போது பெரும் கூச்சல் எங்களை உணவு வடிவத்தில் கொல்ல முயன்றது ..நாங்கள் எங்கள் வெள்ளை இனத்தலைவரான சிதம்பரத்திடம் ஓடினோம் ..அவர் சொன்னார் நீங்கள் நினைத்தபடி வாழ வேண்டுமானால் உணவை தின்பதை கேவலாமாக கருத வேண்டும் அது தான் உலக தலைவர் அமரிக்க தளபதி விரும்புவார் ..நாங்களும் அதன்படியே வாழ முயன்றோம்..எம் சந்ததிகள் மட்டும் செத்து போனது ..கவலை வேண்டாம் நமக்கு நமது தலைவர் சிதம்பரம் நல்ல பட்டம் சுட்டி மகிழ்வார் ...சிரித்துக்கொண்டே வாங்கிக்கொள்வோம் பரதேசி என்ற அந்த மாபெரும் பட்டத்தை..

கீரா இயக்குனர்: எங்களுக்கென நதி இருந்தது ....யாராலும் பெயர் சூட்டப...: "எங்களுக்கென நதி இருந்தது ....யாராலும் பெயர் சூட்டப்படாத பறவைகள் எங்களின் வனம் முழுதும் குதுகளித்து கிடந்தன,.பூமியின் பாரிய பரப்புகளை அதிர்வி..."

இடுகையிட்டது கீரா | 10:59 PM | 1 கருத்துரைகள் »

எங்களுக்கென நதி இருந்தது ....யாராலும் பெயர் சூட்டப்படாத பறவைகள் எங்களின் வனம் முழுதும் குதுகளித்து கிடந்தன,.பூமியின் பாரிய பரப்புகளை அதிர்வித்து மகிழ காட்டாறுகள் எங்கள் வசமிருந்தன..அவ்வபோது எம் குழந்தைகளை மகிழ்விக்க எங்களின் மூத்தி நீலி இருந்தாள்..நாங்கள் மற்ற உயிரினங்களை போல உணவு சேகரிக்க வயல் வெளிகளை படைத்திருந்தோம் ..எங்களின் காதலை முன் மொழிய ஆவாரம் பூக்களை எம் பெண்களுக்கு சூட்டி மகிழ்ந்த நினைவுகள் இப்பொழுதும் மிச்சமிருக்கின்றன..இப்பொழுது நினைவுகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன...வேட்டையாடிய ..உழைத்து சேகரித்த உணவை ஒன்றாய் சமமாய் முதலில் குழந்தைகளுக்கும் ஊனமுற்றவருக்கும் முதியவர்களுக்கும் கொடுத்து பின் நாங்கள் பசியாறிய பொழுதுகளை ஆரிய படையெடுப்பில் பலிகொடுத்தோம் சாதியாக எங்களை நாங்களே பிரித்து கொள்ள பணிக்க பட்டோம் ..முதலில் இங்கிருந்தே நாங்கள் வேறானோம் ..பின் நிலம் ..பின் வனம்.... பின் எங்களை மனிதர்களாய் பழக்கப்படுத்திய எங்களின் மொழி ..எங்களின் பாடல் ..எல்லாம் வருபவனிடம் கொடுத்து கொடுத்து கட்டுண்டோம் ..எல்லாம் முடிந்ததது ...எமக்காக கரும் புலியாக காட்ச்சியளித்த தலைவனும் இல்லை ..ஒன்றே ஒன்றை மட்டும் மிச்சம் வைத்திருக்கிறோம்..அது அடிமை ..

Pachai Engira Kaathu - TBO Interview (Part 02 of 02)

இடுகையிட்டது கீரா | 3:57 AM | 0 கருத்துரைகள் »

Pachai Engira Kaathu - TBO Interview (Part 01 of 02)

இடுகையிட்டது கீரா | 3:53 AM | 0 கருத்துரைகள் »

இடுகையிட்டது கீரா | 7:15 AM | 0 கருத்துரைகள் »

சுரணை சட்டென வந்தது..உயர்த்தி பிடிக்க வேண்டிய கொடி அது ..முதன் முதலாக உதவி இயக்குனர்களால் தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் ..நாம் யாருக்கும் கதைகள் என்கிற பெயரில் இனி முதலமைச்சர் நாற்காலிகளுக்கு இடம் போட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ..மண் சார்ந்த கதைகளுக்கு சமரசமின்றி செய்ய ஒரு அமைப்பு ..வளரட்டும் ..நமது சேனைகள்.நம் வாழ்வியலை மீட்டெடுக்கும் இந்த முயற்ச்சிக்கு தோள் கொடுங்கள் தோழர்களே..

இடுகையிட்டது கீரா | 11:53 AM | 0 கருத்துரைகள் »

கனவு சிரித்தது ..விளையாண்ட புழுதி மண்ணெல்லாம் குண்டு மழையாய் என் நெஞ்சில் பாய நதியாகி நிழல் தந்த மரம் தொலைத்து வாழ்ந்து கேட்ட சருகாகி கிடக்கிறேன் நான் ...கனவு சிரித்தது

Pachai Engira Kaathu - KTV Interview on Aug 06

இடுகையிட்டது கீரா | 11:08 AM | 0 கருத்துரைகள் »

கீரா இயக்குனர்: பாகம் ௧ (தொடர்ச்சி) மீளாத அந்த கொடிய இரவில் நானும...: "பாகம் ௧ (தொடர்ச்சி) மீளாத அந்த கொடிய இரவில் நானும் வரலாற்று பக்கங்களில் தன கை விரல் வெட்டி கொடுத்து ஆதிக்க மாலுமிகளுக்கு உலக பெயர் வாங்கி க..."

இடுகையிட்டது கீரா | 1:43 AM | 0 கருத்துரைகள் »

பாகம் ௧ (தொடர்ச்சி) மீளாத அந்த கொடிய இரவில் நானும் வரலாற்று பக்கங்களில் தன கை விரல் வெட்டி கொடுத்து ஆதிக்க மாலுமிகளுக்கு உலக பெயர் வாங்கி கொடுத்த ஏகலைவனும் பேசிக்கொண்டோம் ..இரு வேறு காலங்களும் அந்த நீண்ட இரவை நிரப்பி இருந்தன..என் அருகில் தூங்கிக்கொண்டிருந்த துணையின் முகத்தில் இருந்த உப்பு கோடுகள் அவ்வப்போது எங்களின் விவாத பொருளாகியது..கட்டை விரல் கேட்க துணிந்த துரோணருக்கு காடு பறிபோவது பற்றிய அக்கறை இன்றைய சிங் கிற்கு இல்லாதது போலவே,அவருக்கும் இல்லாதிருந்ததை ஏகலைவனுக்கு சுட்டி காட்டினேன்..அவன் வெகுண்டழுந்து காட்டை காக்க தன் குடிகளை தயார் செய்தது பற்றி சொன்னான்..ஓயாத அந்த எழுச்சியின் நீட்சி அரச படைகளுக்கு எதிராக காலம் தோறும் தொடர்வதையும் மக்களிடம் புரட்சியின் விதைகள் மழுங்கி பின் எழுவதுமான சுழற்சி பற்றி தொடர்ந்து பேசினோம்..கதிர்கள் மெல்ல சூரியன் வரும் திசை நோக்கி தனது தலையை திருப்பின..என் மனம் உறங்க தொடங்கியது..

கீரா இயக்குனர்: பாகம் ௧ நினைவு தொடங்கிய நாட்களின் மௌனத...: "பாகம் ௧ நினைவு தொடங்கிய நாட்களின் மௌனத்தை உடைக்கும் முகமாக துவங்குகிறது மன சாலை ...தேவைகள் சிறிதும் பெரிதுமான சாலைகள் அவை..பேச்ச..."

பாகம்- ௧.. நினைவு தொடங்கிய நாட்களின் மௌனத்தை உடைக்கும் முகமாக துவங்குகிறது மன சாலை ...தேவைகள் சிறிதும் பெரிதுமான சாலைகள் அவை..பேச்சின் கன்னியில் சொற்கள் சிதறி கிடந்தன ..அருபத்தின் வாசல்கள் எனக்கான கதவை அடைத்து வைத்திருந்தது..இனி செய்வதற்கு ஒன்றுமில்லை ..ஆசையாய் சேகரித்த மகனை ஏகலைவன் என பெயர் சூட்டி வில்லேந்த வைக்க நினைத்த போராளியை சாம்பலாக்க விரும்பாமல் நான் விளையாடிய எனது குடிசையில் புதைத்தேன்..அவனுக்கான ஆன்மாவும் வில்லும் தூங்கவிடாமல் செய்த இரவை கிழித்தபடி என் வீட்டு உத்திரத்தில் தொங்கியபடி என்னையே ஏக்கமாக பார்த்தது..அப்பொழுதுதான்..காலையில் இருந்து தேங்கி அடங்க மறுத்த எனது கண்ணீர் கேவலோடு வானத்தை கிழித்தபடி கொட்ட துவங்கியது...

இடுகையிட்டது கீரா | 2:57 AM | 5 கருத்துரைகள் »

காலம் என்னை கழுவிலேற்றி வைத்திருக்கிறது ..துங்கா இரவுகள் எப்போதும் என்னிடம் மிச்சமிருக்கின்றன..என் வனமெங்கும் தேவதைகள் நிரம்பியிருந்தாலும் வெறுமையின் உச்சத்திலேயே ஒவ்வொரு கணமும் நதியில் அடங்காத நீராக வாழ்வின் பெரும் சுழியாகி நிற்கிறது...ஒரு இனத்தின் அவலம் கண்முன்னே நிகழ்ந்தும் கவிதை எழுதும் அடைப்பிற்குள் சுருங்கி போன கேவலம் மனதின் அடியாழத்தை நொறுக்கி கொண்டிருக்கிறது....

இடுகையிட்டது கீரா | 12:48 PM | 0 கருத்துரைகள் »

நானும் உங்களை போல சக மனிதன் தான் ...பெயர் கீரா ....