நீங்கள் எப்போதாவது விபத்தை பார்த்து மயக்கம் வருவதாக சொல்வீர்கள்..?எப்போதாவது பின கிடங்கில் எட்டி பார்க்கும் வாய்ப்பிருந்தால் குடலை புரட்டுவதாக சொல்வீர்கள் ..?எந்த கணத்திலாவது உடம்பில் வெடிகளை கட்டிக்கொள்ள சம்மதிப்பீர்களா ..?எந்த கணத்திலாவது தெரிந்தே தன்னை மாய்த்துக்கொள்ள விரும்புவீர்களா..?ஆம் என்றால் உங்களுக்கு உங்களின் உரிமை மீதான அட்பாக்கு முறைக்கு எதிராக, ,உங்களின் சுதந்திரத்தின் மீதான தடைகளுக்கு எதிராக ,உங்களின் சக சகோதரியை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் போது பொங்கி எழுந்தவராக இருப்பீர்கள்..?
உங்களை போலவே சுதந்திர தாகத்துடனும் ,தன மொழியை தன சொந்தங்களுடன் பேசிக் கொள்ளவும்,தான் வாழ்ந்த மண்ணை தனது சமுகத்திற்காக விட்டு செல்லவும் ..போராடிய ,அமைதி வழி தோற்ற தருணத்தில் துவக்கை தனக்கு ஆதரவாக கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்ட மாபெரும் போராளிகளின் வீரம் செறிந்த நினைவு நாள் நவம்பர் 27 ..
விஜயையும் அஜித்தும் பணத்திற்காக கெட்டவர்களை அடிக்கும் போது கொண்டாடுகிற நீங்கள் ..உங்களின் எதிர்காலத்திற்க்காக உயிரை தொலைத்த மாவீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ..
செல்களின் பொத்தல் களை உடம்பில் வாங்கி மாய்ந்து போன அவர்களுக்காக என்ன செய்ய வேண்டும் ..உங்களை போல அவர்கள் டிச்கொத்தேவில் களியாடவில்லை..உங்களை போல மூன்று வேலையும் உண்டு புணர்ந்து திரிந்தவர்கள் இல்லை ..அவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் ..உங்களை போல உறவுகளுடன் விருந்து கொண்டாடவில்லை அவர்கர் ..உலகத்தின் அத்தனை சந்தோசங்களையும் சமரசத்தோடு ஏற்று கொள்ளும் உங்களை போல அவர்கள் இல்லை .. அப்படியானால் நீங்கள் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ..உங்களை அவர்கள் காலத்திற்கு அழைக்க வில்லை அவர்கள் ..உங்களுக்காக மட்டுமே அவர்கள் போராடினார்கள் ..அப்படியானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ..நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ..



  • Prabalini Prabakaranமற்றும் Ravee Inbaa ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.

    • Prabalini Prabakaran
      அந்த மாவீரர்களை பெற்று தந்து இன்று பட்டினியில் தனிமையில் வாடும் அவர் குடும்பத்திற்கு
      குறைந்த பட்சம் உணவு கொடுக்கலாமா? மானம் காக்க உடை கொடுக்கலாமா?
      தமது அண்ணன் தம்பியை இழந்து தவிக்கும் சகோதரிகளுக்கு வாழ்க்கை அமைத்து கொடுக்கலாமா?
      மரங்களுக்கும் ...செடிகளுக்கும் மத்தியில் விலங்குகள் போல் வாழும் உறவுகளுக்கு ஒரு குடிசை கொடுக்கலாமா?
      இவையெல்லாம் இன்று தவிக்கும் எமது உறவுகளுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டியது.
      மிச்சம்??? தெரியவில்லை.. எங்கள் எதிர்காலம் புரியவில்லை!!!!

0 கருத்துரைகள்

Post a Comment