இடுகையிட்டது கீரா | 1:43 AM | 0 கருத்துரைகள் »

பாகம் ௧ (தொடர்ச்சி) மீளாத அந்த கொடிய இரவில் நானும் வரலாற்று பக்கங்களில் தன கை விரல் வெட்டி கொடுத்து ஆதிக்க மாலுமிகளுக்கு உலக பெயர் வாங்கி கொடுத்த ஏகலைவனும் பேசிக்கொண்டோம் ..இரு வேறு காலங்களும் அந்த நீண்ட இரவை நிரப்பி இருந்தன..என் அருகில் தூங்கிக்கொண்டிருந்த துணையின் முகத்தில் இருந்த உப்பு கோடுகள் அவ்வப்போது எங்களின் விவாத பொருளாகியது..கட்டை விரல் கேட்க துணிந்த துரோணருக்கு காடு பறிபோவது பற்றிய அக்கறை இன்றைய சிங் கிற்கு இல்லாதது போலவே,அவருக்கும் இல்லாதிருந்ததை ஏகலைவனுக்கு சுட்டி காட்டினேன்..அவன் வெகுண்டழுந்து காட்டை காக்க தன் குடிகளை தயார் செய்தது பற்றி சொன்னான்..ஓயாத அந்த எழுச்சியின் நீட்சி அரச படைகளுக்கு எதிராக காலம் தோறும் தொடர்வதையும் மக்களிடம் புரட்சியின் விதைகள் மழுங்கி பின் எழுவதுமான சுழற்சி பற்றி தொடர்ந்து பேசினோம்..கதிர்கள் மெல்ல சூரியன் வரும் திசை நோக்கி தனது தலையை திருப்பின..என் மனம் உறங்க தொடங்கியது..

0 கருத்துரைகள்

Post a Comment