பாகம்- ௧.. நினைவு தொடங்கிய நாட்களின் மௌனத்தை உடைக்கும் முகமாக துவங்குகிறது மன சாலை ...தேவைகள் சிறிதும் பெரிதுமான சாலைகள் அவை..பேச்சின் கன்னியில் சொற்கள் சிதறி கிடந்தன ..அருபத்தின் வாசல்கள் எனக்கான கதவை அடைத்து வைத்திருந்தது..இனி செய்வதற்கு ஒன்றுமில்லை ..ஆசையாய் சேகரித்த மகனை ஏகலைவன் என பெயர் சூட்டி வில்லேந்த வைக்க நினைத்த போராளியை சாம்பலாக்க விரும்பாமல் நான் விளையாடிய எனது குடிசையில் புதைத்தேன்..அவனுக்கான ஆன்மாவும் வில்லும் தூங்கவிடாமல் செய்த இரவை கிழித்தபடி என் வீட்டு உத்திரத்தில் தொங்கியபடி என்னையே ஏக்கமாக பார்த்தது..அப்பொழுதுதான்..காலையில் இருந்து தேங்கி அடங்க மறுத்த எனது கண்ணீர் கேவலோடு வானத்தை கிழித்தபடி கொட்ட துவங்கியது...

0 கருத்துரைகள்

Post a Comment