பூக்கள் இல்லாத நகரங்களை,மனிதர்கள் இல்லாத இல்லங்களை,பறவைகள் அற்ற வானத்தை நாம் தொடர்ச்சியாக கட்டமைத்து கொண்டிருக்கிறோம்..கடன் வாங்கிய பிறமொழி வார்த்தைகளால் நமது பார்வையை விரித்து கொண்டதாய் மகிழ்ந்து கொள்கிறோம் ..யாரோ எதுதிய கவிதைகளை காதலியிடம் கொடுத்து காம இச்சையை பூர்த்திசெய்து கொள்ளும் மரபாச்சிகளாய் வாழ்வை முடித்து கொள்கிறோம் ..சினிமாவிலிருந்து உலக புரட்சிகள் வரை நாம் பேச வெளியில் இருந்து மோக குப்பைகள் நம்மிடம் நிறைய குவிந்து கிடக்கின்றன ..நம்மையறியாமல் நமக்குள்ளே கருத்து முளைத்து சிறகு விரித்தால் கூட எங்கேயோ திருடப்பட்டதான மனநிலையை நாம் கொண்டிருக்கிறோம் ..மொத்தத்தில் நாமக்கான ஒன்றுமற்று திடீர் கடவுளின் நிலையாகிறோம் ..

0 கருத்துரைகள்

Post a Comment